Posted in சிறுகதை

வாடிவாசல்” – ’இது மிருகமும், மனிதனும் ஒன்றாய் வாழ்ந்த கதை

சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் நாவலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அதன் அருகில் இருந்து பார்ததது போன்ற நெருக்கமான உணர்வை தத்ருபமாக சொல்லப்பட்டுள்ளது. விறுவிறுப்பான முறையில் மிக இயல்பாக ஒரே நாள் அந்த மாலைநேரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் அதையொட்டிய நிகழ்ச்சிகளையும் மட்டுமே பிரதான களமாகக் கொண்டு 70 பக்கங்கள் மட்டுமே

ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டின் உள்ளே புதைந்து கிடக்கும் நிகழ்வுகளையும், நெகிழ்வுகளையும், அதே ஆட்டக்களத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், வாடிவாசலில் நிற்கும் ஒவ்வொரு வீரனும், வெளியில் வரவிருக்கும் வெறுப்பு ஊற்றப்பட்ட மிருகத்தினை அடக்கக் காத்திருக்கும் இன்னொரு மிருகம் என்பதையும் வர்ணனைகளுடன் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது சி.சு.செல்லப்பா அவர்களின் ‘வாடிவாசல்’. 

1959 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளிவந்த இப்புத்தகம், இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போகும் வகையிலான வார்த்தைகளாலும் , வட்டார மொழியின் வீச்சு சற்றும் குறையாமலும் படைக்கப்பட்டிருப்பது இதன் வெற்றி

Author:

Book lover, Traveler, Biker and Learner

Leave a comment